சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜக நிர்வாகி மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துரை அருண், காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூன்.11) புகாரளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’இந்தியாவில் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு பிரதமர் மோடி படம் பொருந்திய சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மோடி புகைப்படத்தை நீக்கிவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் பொருந்திய சான்றிதழ் வழங்கி வருவதாக பாஜக நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் அவதூறு பரப்பி வருகிறார்.
தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு ஒன்றிய அரசின் சான்றிதழை மட்டும் தான் வழங்கப்படுகிறது. ஆனால் மார்பிங் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயரை களங்கபடுத்தும் நோக்கில் நிர்மல் குமார் பதிவிட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கி, அந்த மாநில முதலமைச்சர் படம் பதிவிட்ட சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர்.
-
Covin Cert: Original & DMK Version 🤦♂️
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) June 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Original Fake pic.twitter.com/9rs5msdifo
">Covin Cert: Original & DMK Version 🤦♂️
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) June 9, 2021
Original Fake pic.twitter.com/9rs5msdifoCovin Cert: Original & DMK Version 🤦♂️
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) June 9, 2021
Original Fake pic.twitter.com/9rs5msdifo
தமிழ்நாட்டில் தற்போது வரை பிரதமர் மோடி பொருந்திய சான்றிதழ் மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, அவதூறு பரப்பிய நிர்மல் குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்’என்றார்.
இதையும் படிங்க: அர்ச்சகராக விருப்பமுள்ள பெண்களுக்கு பயிற்சி - அமைச்சர் சேகர் பாபு