ETV Bharat / state

திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை.. தலையை தேடும் பணி தீவிரம் - severed head

திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அடையாறு ஆற்றில் வீசப்பட்ட அவரது தலையை தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை.. துண்டிக்கப்பட்ட தலையை தேடும் பணி தீவிரம்

author img

By

Published : May 14, 2022, 12:03 PM IST

சென்னை மணலியை சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி (65). இவரை கடந்த 10 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் மணலி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் போலீசார் சக்கரபாணியின் செல்போன் எண்ணை ஆராய்ந்தனர். இதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டனர்.

அதில், தகாத உறவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தமீம் பானு என்பவரும், அவரது சகோதரர் வாஷிம்பாஷா என்பவரும் கூட்டாக சேர்ந்து திமுக பிரமுகரான சக்கரபாணியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அளித்த தகவலின்படி, சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சக்கரபாணியை துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்து சாக்குமூட்டையில் வைத்திருப்பதையும் போலீசார் கண்டறிந்து, அந்த மூட்டையைக் கைப்பற்றினர்.

மேலும் இக்கொலைக்கு உடந்தையாக ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு என்பவர் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து தமீம் பானு, வாஷிம்பாஷா மற்றும் ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு ஆகிய மூவரையும் ராயபுரம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இதற்குப் பிறகான போலீசாரின் விசாரணையில், வெட்டப்பட்ட சக்கரபாணியின் தலையை அடையாற்றில் வீசியதாக வாஷிம் பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தக் கொலை வழக்கிற்கு வீசப்பட்ட தலை முக்கியம் என்பதால், நேற்றிரவு வாஷிம் பாஷா தூக்கி வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். இதனடிப்படையில் ராயபுரம் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் முதற்கட்டமாக அடையாறு ஆற்றில் வீசப்பட்ட தலையை தீவிரமாக தேடியுள்ளனர். ஆனால் அந்த தலை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை 5 மணி முதல் திருவான்மியூர், அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர். பின்னர், ரப்பர் படகு மூலமும் மற்றும் ராட்சத கொக்கியை ஆற்றில் இறக்கியும் வெட்டப்பட்ட தலையை தேடி வருகின்றனர். மேலும் ஸ்கூபா வீரர்களும் ஆற்றின் உள்ளே இறங்கி தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்ப தகராறில் கணவன் குடித்த விஷத்தை பிடுங்கி குடித்த மனைவி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.