திமுக பொருளாளர் துரைமுருகன் ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து சிறுநீர் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.
இதனையடுத்து, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், உடல் சோர்வு காரணமாக தற்போது மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என அக்கட்சியினரால் எதிர்பார்க்கப்படுகிறது.