ETV Bharat / state

திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் - பின்னணி என்ன ?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் எனக் கணித்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு நாள் உள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம்!

author img

By

Published : Apr 30, 2021, 8:37 AM IST

சென்னை: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று (ஏப்ரல்.30) காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ரிபப்ளிக் சி.என்.எக்ஸ், இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் எனக் கணித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று (ஏப்.29) வெளியானது. வெளிவந்த கருத்துக் கணிப்புகள் அனைத்திலுமே தமிழ்நாட்டில் திமுக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று (ஏப்.29) கூறியுள்ளார். அதில் காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை அன்று (மே.2) மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு நாள் உள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.