ETV Bharat / state

நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை பணிசெய்யவிடாமல் மிரட்டிய திமுக கவுன்சிலர்! - திமுக கவுன்சிலர்

மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால்பணியை மேற்கொண்டு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக திமுக கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 31, 2023, 10:53 PM IST

நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை பணிசெய்யவிடாமல் மிரட்டிய திமுக கவுன்சிலர்!

சென்னை: தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் சாலையில் மழைக் காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கும், அதனை தவிர்க்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால்பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியை மேற்கொள்ள விடாமல் தனியார் கட்டுமான நிறுவனம் (விஜிகே) ஒன்று மணல், கற்களை சாலையோரம் கொட்டி வைத்து பணி செய்யவிடாமல் இடையூறு செய்துள்ளனர்.

இதனால் வேங்கைவாசல் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் மாணிக்கம் (ஆர்.ஐ) அவர்கள், சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணல், கற்களை வாரி அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது விஜிகே கட்டுமான நிறுவனம் தாம்பரம் மாநகராட்சி 33ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சுரேஷ் என்பவருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து ‘வேலையை நிறுத்துடா, என்னடா பண்ணுவ, வாயெல்லாம் ஒடைச்சி விடுவேன்’ என ஏக வசனத்தில் ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனால், அதிகாரியோ ஆளும் கட்சி கவுன்சிலர் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் மிரண்டு போய், பேச கொஞ்சம் நேரம் ஆகாது என கூறி விட்டு அத்தனை ஆபாச பேச்சையும் கேட்டுக் கொண்டு அமைதியாய் இருந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுக்கும் திமுக கவுன்சிலர் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு திட்டியதன் நோக்கம் என்ன? எதற்காக சம்மந்தமில்லாமல் வந்து தலையிட்டார்? என அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'அவர் என்னை திட்டியதால் நானும் திட்டினேன்' எனக் கூறினார்.

நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளரிடம் கேட்டபோது, 'இதையெல்லாம் விட்டு விடுங்கள்' எனக் கூறி இணைப்பை துண்டித்து விட்டார். ஆளும் கட்சி கவுன்சிலரின் அராஜக நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்படுத்த வேண்டும் என புலம்புகின்றனர், அரசு அதிகாரிகள்.

இதையும் படிங்க: தூத்துக்குடி - மேலூரில் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நிற்காது… காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.