ETV Bharat / state

மாநகராட்சி கூட்டத்தில் மயங்கி விழுந்த திமுக கவுன்சிலர் - மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் இருக்கையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

DMK councilor who fainted in the corporation meeting
மாநகராட்சி கூட்டத்தில் மயங்கி விழுந்த திமுக கவுன்சிலர்
author img

By

Published : Jan 30, 2023, 3:21 PM IST

Updated : Jan 30, 2023, 3:35 PM IST

மாநகராட்சி கூட்டத்தில் மயங்கி விழுந்த திமுக கவுன்சிலர்

சென்னை: மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஜனவரி மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று காலை துவங்கியது. 64 தீர்மானங்களை நிறைவேற்றுவது சம்பந்தமாக நடைபெற்ற இந்த கூட்டம் காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதில் நேரம் இல்லா நேரம் முடியும் இறுதி நேரத்தில் திமுக உறுப்பினர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற 14வது வார்டு கவுன்சிலர் பானுமதி அவரது இருக்கையில் திடீரென மயங்கி சரிந்தார்.

மாநகராட்சியில் இருந்த செவிலியர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தார். பின்னர் பிற உறுப்பினர்கள் உடனடியாக அவரை தூக்கிச் சென்று ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக அவருக்கும் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என முதலுதவி அளித்த செவிலியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகியை திமுக எம்எல்ஏ அடித்ததாக புகார்!

Last Updated : Jan 30, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.