சென்னை ராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அடிப்படை வசதி செய்து தராத அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பேசிய அவர், ’ஜெயக்குமார் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அதற்கு திமுகதான் காரணம். அவரது தந்தையை கவுன்சிலராக உருவாக்கியது திமுகதான். அதனை அவர் மறந்து பேசக்கூடாது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் காங்கிரஸை நிற்க வைத்தது தவறுதான். இதனால்தான் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு முறை வெற்றி பெற்றார். இந்த முறை நிச்சயமாக திமுகதான் ராயபுரத்தில் போட்டியிடும்.
பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களுக்கான நிலுவைத் தொகையை இன்னமும் ஆளும் அதிமுக அரசு வழங்கவில்லை. ஆனால் 1000 கோடி ரூபாய்க்கு விவரங்களை கொடுத்துள்ளார்.
சிபிஐ விசாரணை இருக்கக்கூடிய பொள்ளாச்சி விவகாரத்தைக் குறித்து பேசக்கூடாது என அதிமுகவினர் வழக்கு போட்டுள்ளனர். பொள்ளாச்சி விவகாரத்தை பொது இடத்தில் வைத்து விவாதிப்போம்’ என்றார்.
இதையும் படிங்க:ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்போம்: மு.க. ஸ்டாலின்!