ETV Bharat / state

‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்ட நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆய்வு - dmk chief mk stalin

சென்னை: ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

mk stalin
mk stalin
author img

By

Published : Apr 24, 2020, 11:38 PM IST

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், கரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கோடு திமுக சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கான உதவி எண்ணான "90730 90730" என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு எட்டப்பட்ட தீர்வுகள் குறித்து, சென்னை மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆகியோரைக் காணொலிக் காட்சி மூலமாகத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.

மேலும், ‘ஒருங்கிணைவோம் வா!’ திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தும் நிர்வாகிகளைப் பாராட்டிய ஸ்டாலின், அப்பணி மேலும் செம்மையாக நடைபெற தமது ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.