ETV Bharat / state

'ஜெயலலிதா கைரேகை போலியானது' - திமுக எம்எல்ஏ டெல்லி சிபிஐயிடம் மனு - அதிமுகவினர் மீது சிபிஐயிடம் மனு

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

dmk mla saravanan
author img

By

Published : Oct 18, 2019, 9:01 PM IST

2016ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுக சார்பில் வழங்கப்பட்ட வேட்புமனுவில் பி வடிவில் ஏ.கே. போஸ் வேட்பாளராக முன்மொழியப்பட்டு, இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை இடம்பெற்றிருந்தது.

சுயநினைவு இல்லாமலிருந்த ஜெயலலிதா எவ்வாறு கைரேகை வைத்திருக்க முடியும் என்று திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருப்பரங்குன்றத்தில் ஏ.கே. போஸ் வெற்றிபெற்றது செல்லாது என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை சந்தேகத்திற்கிடமாகவும் இது சட்டவிரோதமானது என்றும் கூறி கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா கைரேகையை முறைகேடாக பெற்று அதை அங்கீகரிக்கச் செய்த அப்போதைய தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அலுவலர் வீர ராகவ ராவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவா, மருத்துவர் பாலாஜி, அப்போலோ மருத்துவர்கள் பாபு, ஆப்ரகாம், ஜெயலலிதா தோழி சசிகலா, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் திமுக சார்பில் சரவணன் மனு அளித்துள்ளார்.

Intro:Body:2016ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயலலிதா கைரேகையை முறைகேடாக பெற்று அதை அங்கீகரிக்க செய்த அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ், தேர்தல் நடத்தும் அதிகாரி ஜீவா, மருத்துவர் பாலாஜி , அப்பலோ மருத்துவர்கள் பாபு ,ஆப்ரகாம் மற்றும் ஜெயலலிதா உதவியாளர் சசிகலா, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டவர்கள் மீது கிரிமனல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன் மனு அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது எனவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைரேகை செல்லாது எனவும் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை சூட்டி காட்டி தற்போது திமுக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன் ஜெயலலிதா கைரேகை போலியாக பெற்றவர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.