சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய கட்சி தலைவர் காதர் மொய்தீன் , சட்டப்பேரவை உறுப்பினர் அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பொருளாளர் எம்.எஸ்.சாஜகான் உள்ளிட்டவர்கள் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து பேச அண்ணா அறிவாலயத்திற்கு இன்று வருகை தந்திருந்தனர்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தேர்தல் குழுவுடன் தொகுதி பங்கீடு குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் காதர் மொய்தீன், "திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த முறை 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டதை திமுக தொகுதி பங்கீடு குழுவிற்கு நினைவுபடுத்தினோம். எங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்தோம், திமுக அவர்கள் நிலையை தெரிவித்தனர். நாளை மாலை மீண்டும் அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும்" என்றார்.
இதையும் படிங்க: இரண்டு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடுவதாகத் தகவல்