ETV Bharat / state

'கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும்' - கே.எஸ். அழகிரி - MK Stalin met with mk alagiri

சென்னை: கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

dmk
dmk
author img

By

Published : Jan 18, 2020, 2:41 PM IST

உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்துப் பேசினார்.

உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில், திமுக கூட்டணி தர்மத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதாக கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையே இந்த விவகாரத்தின் ஆரம்பப் புள்ளியாகும். அதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் இதைப்பற்றி பேசும்போது, ”காங்கிரஸ் இல்லையென்றால் எங்களுக்கு என்ன நஷ்டம், அவர்களுக்குத்தான் நஷ்டம். காங்கிரஸ் செல்ல வேண்டுமென்றால் செல்லட்டும்” என அழகிரியின் அறிக்கைக்குப் பதிலடி கொடுத்தார்.

dmk
கே.எஸ். அழகிரி - மு.க. ஸ்டாலின் சந்திப்பு

தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஜெயகுமார், ”தலையிருக்க வால் ஆடக்கூடாது, துரைமுருகன் கருத்தால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” எனக் கருத்து தெரிவிக்க, திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் என்று பல தரப்பிலும் யூகிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே அழகிரி இன்று மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, ”திமுக கூட்டணியில் எந்தப் பிளவும் கிடையாது. எங்களுக்குத் தோன்றிய விஷயத்தை நாங்கள் சொன்னோம். ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனி நிலைப்பாடு உள்ளது. அதேபோல் கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும். திமுக - காங்கிரஸ் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும்” என்று சர்ச்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பு

துரைமுருகன் கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், ”திமுக - காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கருத்துகளைக் கூறியுள்ளனர். ஏதாவது பிரச்னை வந்தால் திமுக தலைவர், காங்கிரஸ் தலைவர் பேசி முடிவுசெய்துகொள்வார்கள். இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்துகள் கூற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் வரையும், அதன் பின்னரும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். அதிமுக, திமுக கூட்டணி இடையே வேறுபாடுகள் நிறைய உள்ளது. இது மதச்சார்பற்ற கூட்டணி. இந்திய ஒற்றுமைக்காக கூட்டணி அமைத்து செயல்பட்டுவருகின்றோம். இந்தியாவில் எந்தக் கட்சியும் தனித்து நின்று வெற்றிபெற முடியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க:திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் - துரைமுருகன்

Intro:Body:சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால் கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, திமுக கூட்டணியில் எந்த பிளவும் கிடையாது. எங்களுக்கு தோன்றிய விஷயத்தை நாங்கள் சொன்னோம். ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனி நிலை உள்ளது. அதே போல் கூட்டணி என்றால் ஊடலும், கூடலும் இருக்க தான் செய்யும் என தெரிவித்த அவர் திமுக - காங்கிரஸ் எப்போதும் ஒத்துமையாக இருக்கும் என தெரிவித்தார்.

துரைமுருகன் கருத்தை பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில், திமுக - காங்கிரஸ் தலைவர்கள் என அவர்கள் அவர்கள் கருத்தை கூறியுள்ளனர்.ஏதாவது பிரச்சனை வந்தால் திமுக தலைவர், காங்கிரஸ் மாநில தலைவர் பேசி முடிவு செய்துகொள்வார்கள். இரு கட்சி இரண்டாம் கட்ட தலைவர் கருத்துக்கள் கூற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெயகுமார் கருத்துக்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி ஜெயகுமார் எதிர்கட்சி என்பதால் அவர் அவ்வாறு கருத்துகள் கூறுவார் என தெரிவித்தார். கமல் ஒரு புறம் மதசார்பற்ற ஆதரவாளர் என கூறி வருகிறார், இன்னொரு பக்கம் ரஜினி பாஜக ஆதரவாளராக என்று தெரிந்தும் ரஜினி உதவி வேண்டும் என பேசி வருகிறார். கமல் பாஜாக உதவியை கேட்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

திமுக - காங்கிரஸ் நட்பு உடைய கட்சி. சட்டமன்ற தேர்தல் வரையும் அதன் பின்னரும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.

ரஜினி தர்பார் படம் பற்றி ஸ்டாலினிடம் பேசினேன். தர்பார் நன்றாக உள்ளது என ஸ்டாலின் கூறினார். அதை பற்றி பேசினோம்.

ரஜினி மிகவும் நல்லவர். ரஜினி முரசொலி - துக்ளக் ஒப்பிட்டு பேசியதை தவிர்த்திருக்கலாம். சினிமா என்றால் கதை வசனம் போல் பேசுவார், இது சொந்த கருத்து என்பதால் குழம்பிவிட்டார்.

அதிமுக, திமுக கூட்டணி இடையே வேறுபாடுகள் நிறையா உள்ளது. இது மதசார்பற்ற கூட்டணி. இந்திய ஒற்றுமைக்காக கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றோம். அதிமுக நீட் தேர்வு, குடியுரிமை சட்ட போன்றவை ஆதரவாக செயல்படுகின்றது.

குடியுரிமை சட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது சிறிய விஷயம். திமுக, காங்கிரஸ் அதை ஏதிர்த்தே பாராளுமன்றத்தில் வாக்கு அளித்துள்ளோம்.

திமுக - காங்கிரஸ் கட்சி ஹேல்த்தியா உள்ளது. மாநகராட்சி, நகராட்சி தேர்தல் வரும் போது இடஒதுக்கீடு பற்றி பேசலாம் என தெரிவித்தார். மேலும் இந்தியாவில் எந்த கட்சியும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.