சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை செயற்குழுவின் உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள புனித மார்க்ஸ் பள்ளியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தேன் என்றதன் அதனடிப்படையில் தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எத்தகைய தீர்ப்பை மக்கள் வழங்கினார்களோ, அத்தகையை தீர்ப்பைத்தான் தற்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வழங்க இருக்கின்றனர்.
திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதுவே இன்றைய நிலைமை" என்றார்.