இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்;
மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டம் என்பது மிகவும் மோசமானது. இந்த நாட்டிற்காக உழைத்தவர்களை பார்த்து நீ இந்தியனா என்று கேட்டால் நியாயமற்றது. மோடி வீழ்வதற்கான நேரம் வந்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு திமுக, காங்கிரஸ் குடியுரிமை வழங்கவில்லை என்றால் அப்போது இந்த பிரச்னை வரவில்லை. இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில்;
மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் கொள்கையை செயல்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. அதிமுக, பாமக கொள்கை ரீதியாக செயல்பட்டிருந்தால் இதை ஆதரித்திருக்க மாட்டார்கள். கொள்கையை விட்டு மத்திய அரசுக்கு அடிபணிந்து ஆதரித்ததின் மூலம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், சட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்ற பெரும்பான்மை மட்டும் போதாது மக்களின் ஆதரவும் வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்