ETV Bharat / state

தமிழ்நாட்டில் பேனர் கலாசாரத்தை வளர்த்துவிட்டது திமுக, அதிமுகதான் - விஜயகாந்த் குற்றச்சாட்டு - தமிழ்நாட்டில் பேனர் கலாசாரத்தை வளர்த்துவிட்டது திமுக, அதிமுக தான்

சென்னை: தமிழ்நாட்டில் பேனர் வைக்கும் வைக்கும் கலாசாரத்தை வளர்த்துவிட்டது திமுக, அதிமுக கட்சிகள்தான் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த
author img

By

Published : Sep 13, 2019, 8:44 PM IST

பள்ளிக்கரணையில் நேற்று வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர் விழுந்ததில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர்.

அந்த வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது முகநூல் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பேனர் வைக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக கட்சிகள் இதை ஒரு கலாசாரமாகவே வளர்த்துவிட்டார்கள். அதன் பிறகு அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி மற்றும் குடும்ப விழாக்களுக்கு பேனர் வைப்பது வழக்கமானது. பின் தனி நபர்களும், பொதுமக்களும் தங்கள் வீட்டு விஷேசங்களுக்கு பேனர் வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் தொடங்கியது.

பேனர் வைப்பதற்கு தடை செய்ய வேண்டும், என்று முடிவெடுத்தால் அனைத்து தரப்பினரும் அதை ஆமோதித்து தடை செய்ய வேண்டும். ஆனால் நேற்று சென்னை, பள்ளிக்கரணையில் மாணவி சுபஸ்ரீ உயிரிழந்த துயரச்சம்பவத்திற்கு பிறகு, அதுகுறித்து பேசுவதும், பேனர் வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று விவாதிப்பதும், சிறிது நாட்களுக்கு பிறகு, இச்சம்பவத்தை மறந்து விட்டு மீண்டும் பேனர்கள் வைப்பதும், ஏற்புடையதல்ல.

பேனர் வைக்கக் கூடாது என்றால் அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். மாணவி சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பேனர் வைக்கலாமா? வேண்டாமா? என்பதை நீதிமன்றமும், நீதியரசர்களும் முடிவெடுத்து ஆணையை பிறப்பிக்க வேண்டும். அதை தேமுதிக நிச்சயம் வரவேற்கும்" என்று கூறியுள்ளார்.

Intro:Body:பள்ளிக்கரணையில் நேற்று வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர் அறுந்து விழுந்ததில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பல்வேறு அரசியல் கடௌசி தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர்.

அந்த வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது முகப்புத்தகத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில், "தமிழகத்தில் பேனர் வைக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக கட்சிகள் இதை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்து விட்டார்கள். அதன் பிறகு அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி மற்றும் குடும்ப விழாக்களுக்கு பேனர் வைப்பது வழக்கமானது. பின் தனிநபர்களும், பொதுமக்களும் தங்கள் வீட்டு விஷேசங்களுக்கு பேனர் வைக்கும் வழக்கம் தமிழகத்தில் துவங்கியது.

பேனர் வைப்பதற்கு தடை செய்ய வேண்டும், என்று முடிவெடுத்தால் அனைத்து தரப்பினரும் அதை ஆமோதித்து தடை செய்ய வேண்டும். ஆனால் நேற்று சென்னை, பள்ளிக்கரணையில் மாணவி சுபஸ்ரீ உயிரிழந்த துயரச்சம்பவத்திற்கு பிறகு, அதுகுறித்து பேசுவதும், பேனர் வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று விவாதிப்பதும், சிறிது நாட்களுக்கு பிறகு, இச்சம்பவத்தை மறந்து விட்டு மீண்டும் பேனர்கள் வைப்பதும், ஏற்புடையதல்ல.

பேனர் வைக்க கூடாது என்றால் அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் பல நாட்கள் தூக்கத்திலிருந்து எழுந்ததை போல், ஒரு உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள், பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்தகைய முடிவை அவர் என்றோ எடுத்திருக்க வேண்டும். ஆளுங்கட்சிகாரர் நிகழ்ச்சியின் பேனர் விழுந்து ஒரு உயிரிழப்பு என்றதும் திரு. ஸ்டாலின் அவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனென்றால் பேனர் வைக்கும் கலாச்சாரத்தை துவக்கியதே திமுக தான்.

பேனர் வைக்கக்கூடாது! என்று தீர்மானித்தால் அனைத்து தரப்பினரும் அதை ஏற்க வேண்டும்.
பேனர் வைக்கலாம்! என்றால் அதை முறையாக வைக்க வேண்டும். ஒரு பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டது மிக மிக வருந்தத்தக்கது. மாணவி சுபஸ்ரீ அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தனிநபராக திரு. டிராபிக் ராமசாமி அவர்கள் பேனர் வைக்க கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார். அவரது போராட்டத்திற்கு தேமுதிகவின் ஆதரவு எப்போதும் உண்டு. யாருடைய உயிரும் இங்கு சாதாரணமில்லை, அனைத்து உயிர்களும் முக்கியமானதே.

பேனர் வைக்கலாமா, வேண்டாமா என்பதை நீதிமன்றமும், நீதியரசர்களும் முடிவெடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும். அதை தேமுதிக நிச்சயம் வரவேற்கும்" என்று தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.