தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் தீபாவளி பண்டிகை வருவதால் வெளியூரில் இருப்பவர்கள், வேலை பார்க்கச் சென்றவர்கள் தீபாவளிக்கு முன் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாவார்கள். இந்நிலையில், அக்டோபர் 25ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, முக்கிய ரயில்களின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்களில் அனைத்து டிக்கெட்டும் காலியானது. காத்திருப்புப் பட்டியலில்கூட இடம் கிடைக்காததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கவுண்ட்டர்கள் முன்பு கால் கடுக்கக் காத்திருந்த பயணிகளும் சோகத்துடன் வீடு திரும்பினர்.