தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், கடந்த 3 நாட்களாக சென்னையில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூவிருந்தவல்லி மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து 10 ஆயிரத்து 669 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் மூலம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 140 பேர் பயனடைத்துள்ளார். குறிப்பாக தென்மாவட்டங்களுக்குச் சென்ற பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் 600க்கும் மேற்பட்ட போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: தீபாவளி வாழ்த்துகள் சொல்லும் மெட்ரோ ரயில்!