சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஜனவரி 19) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 816 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 26 ஆயிரத்து 949 நபர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 32 நபர்களுக்கும் என 26 ஆயிரத்து 981 நபர்களுக்கு புதியதாக வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ்
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 90 லட்சத்து 7 ஆயிரத்து 82 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் 30 லட்சத்து 14 ஆயிரத்து 235 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 660 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த மேலும் 17 ஆயிரத்து 456 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 6,501 என உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 23 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 12 நோயாளிகளும் என 35 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 73 என உயர்ந்துள்ளது.
சிகிச்சைப் பெற்று வருபவர்கள்
சிகிச்சைப் பெற்று வருபவர்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் சென்னையில் 62 ஆயிரத்து 612 பேரும் செங்கல்பட்டில் 15,655 பேரும் கோயம்புத்தூரில் 13,728 பேரும் மதுரையில் 4,411 பேரும் திருவள்ளூரில் 7,730 பேரும் என சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை உட்பட பிற மாவட்டங்களில் காலியாக இருந்த படுக்கைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெய்பீம் திரைப்படத்திற்கு மற்றுமொரு மகுடம்! என்னவா இருக்கும்?