தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணயத்திற்குப் பதிவாளராக உயர் நீதிமன்ற உதவி பதிவாளர் அல்லது சார்பு நீதிபதியை நியமிக்க விதிகள் வகுக்கப்பட்டன. இந்நிலையில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளராக, மாவட்ட நீதிபதியை நியமிக்கும் வகையில் 2015ஆம் தேதி விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்காமல், பதிவாளர் நியமன விதிகளில் திருத்தம் கொண்டுவந்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மையத்தின் முன்னாள் தலைவர் சுப்புராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நிர்வாக பணியான பதிவாளர் பணிக்கு, மாவட்ட நீதிபதியாக பணியாற்றுபவரை நியமிக்க அவசியமில்லை என்பதால், 2015ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளராக ஒய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு முன்னாள் தலைவரை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு, நவம்பர் 6ஆம் தேதிக்குள் இந்த மனுவிற்கு பதிலளிக்க கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியாவுக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கைகளால் எழுதப்பட்ட குர்ஆன் மாதிரிகளை ஆய்வுக்கு லண்டன் அனுப்ப உத்தரவு!