ETV Bharat / state

இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு இணையத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்! - கிருஷ்ணகிரி இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு

கிருஷ்ணகிரி: வேலையில்லாமல் இருப்பவர்கள் அரசின் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையத்தை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு இணையத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்!

author img

By

Published : Jun 26, 2020, 2:52 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 6ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் http://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் தொடங்கி வைத்தார்.

அதன் மூலம் தனியார் வேலைவாய்ப்பு பெறவேண்டி வேலை தேடுபவர்கள், வேலையளிப்போர் http://www.tnprivatejobs.tn.gov.in/ இணையம் வாயிலாக பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம். தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இவ்விணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித்தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார்த்துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர, பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப் பணியிடங்களை இவ்விணையதளத்தில் பதிவு ஏற்றம் செய்திடவும், அக்காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்வதற்கும் இவ்விணையதளம் வழிவகை செய்யும்.

வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்களுக்கு இச்சேவைகள் முற்றிலும் கட்டணமின்றி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். தற்போதைய சூழ்நிலைக்கேற்ப மாற்றாக “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்”; மூலம், இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் இம்மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் இளைஞர்களை இணையவழியாக தொடர்பு கொண்டு, தனியார்துறை வேலையளிப்போர்கள் பணி வாய்ப்புகளை வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விணையத்தளத்தின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்விணையதளம் வாயிலாக பணிவாய்ப்பினை பெற்று பயன்பெறவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...காவலர்கள், கைதிகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளதா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.