ETV Bharat / state

கிணற்றில் தூர்வார இறங்கியத் தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்!

சென்னை: பாழடைந்த கிணற்றில் தூர்வார இறங்கியத் தொழிலாளி விஷவாயுத் தாக்கி பலியான சம்பவம் மாங்காடு பகுதியில் நடந்துள்ளது.

மாங்காடு காவல் நிலையம்
author img

By

Published : May 2, 2019, 10:24 PM IST

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(56), இவரது வீட்டின் அருகே பாழடைந்து போன கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றை தூர் வாரி சீரமைக்க மதுரவாயலைச் சேர்ந்த அசோக்(50), மற்றும் சேகர் ஆகியோரை முருகேசன் இன்று வரவழைத்துள்ளார். இதில் அசோக் கயிறு கட்டிக்கொண்டு 20 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தூர் வார இறங்கியுள்ளார்.

அப்போது, பாதி தூரம் சென்றவுடன் திடீரென மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார். இது குறித்து தீயணைப்பு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மயங்கி விழுந்து கிடந்த அசோக்கை இறந்த நிலையில் மீட்டனர். பாழடைந்த கிணறு என்பதால் விஷவாயுத் தாக்கி அசோக் இறந்து போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, மாங்காடு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அசோக்கின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் உடன் வந்த சேகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

      மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(56), இவரது வீட்டின் அருகே பாழடைந்து போன கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றை தூர் வாரி சீரமைக்க மதுரவாயலை சேர்ந்த அசோக்(50), மற்றும் சேகர் ஆகியோரை இன்று வரவழைத்துள்ளார். இதில் அசோக் கயிறு கட்டிக்கொண்டு 20 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தூர் வார இறங்கி உள்ளார். 

அப்போது பாதி தூரம் சென்றவுடன் திடீரென மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார். இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மயங்கி விழுந்து கிடந்த அசோக்கை இறந்த நிலையில் மீட்டனர். பாழடைந்த கிணறு என்பதால் விஷ வாயு தாக்கி அசோக் இறந்து போயிருப்பது தெரிய வந்தது. 

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அசோக் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் உடன் வந்த சேகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.