சென்னை: சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏரி ஆக்கிரமிப்பு எனக்கூறி சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரம் தாங்கள் கரை தெரு பகுதியில் உள்ள 440 வீடுகளை அகற்ற பொதுப்பணி துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வரும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை மூத்த கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று (ஜூலை 06) சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
"பொதுமக்களை பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசிக்கும் மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவது என்ற அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. அப்புறப்படுத்தினால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியாவிலிருந்து தப்பியோடிய பண முதலைகளை பாஜக அரசு மீட்கவில்லை - முத்தரசன் குற்றச்சாட்டு!