ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு முடித்து வைப்பு - former minister harassment case

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கை, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
author img

By

Published : Mar 5, 2022, 7:56 AM IST

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி குடும்பம் நடத்தியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மணிகண்டன், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி நிபந்தனை ஜாமீன் பெற்றார். இந்நிலையில் அந்த நடிகை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், தான் அளித்த புகார் தொடர்பான வழக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால் அந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றத்திற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், இன்னும் பணி முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை நடைமுறை முடிந்தவுடன், வழக்கு தானாகவே சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என விளக்கம் அளித்து, வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: ஹெராயின் எனக்கூறி யூரியாவை விற்க முயன்ற நான்கு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.