ETV Bharat / state

1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளி திறப்பு - 14ஆம் தேதி ஆலோசனை

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 14ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை நடத்தவுள்ளார்.

discuss-on-1st-to-8th-grade-school-opening

author img

By

Published : Sep 8, 2021, 10:29 PM IST

சென்னை : பள்ளிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பது குறித்தும், 1 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் தேவையான வகுப்பறைகள் உள்ளதா என்பது குறித்தும் செப்டம்பர் 14ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாடு அரசு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்க உத்தேசித்துள்ளது. ஆனாலும் தற்போது தொற்று எண்ணிக்கை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு?

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகளை தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சில ஆசிரியர்கள், மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அலுவலர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார். இதில்,அலுவலர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்த இறுதி முடிவை தமிழ்நாடு அரசு அறிவிக்கும்.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ,மாவட்ட கல்வி அலுவலர்கள் உடனான ஆலோசனையில் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் ஆகியவற்றில் தற்போது நிலுவையில் உள்ள பணிகள் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதையும் படிங்க : இலவச வாக்காளர் அடையாள அட்டை - அக்டோபர் 1ஆம் தேதி முதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.