ETV Bharat / state

மோக்கா புயலால் மீனவர்கள் வங்கக் கடலுக்குள் செல்லத் தடை - அமைச்சர் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வங்கக் கடலுக்குள் மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மோக்கா புயலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

author img

By

Published : May 11, 2023, 10:16 PM IST

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிரப் புயலாக மாறி வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையில் நகர்ந்து வருவதால் மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனவும்,

ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடிப் படகுகள் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய வானிலை ஆய்வு மையம், வெளிட்டுள்ள அறிவிக்கையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிரப் புயலாக மாறி வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு ’மோக்கா’ என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து நாளை மறுநாள் சற்று வலுவிழந்து 14ஆம் தேதி 120 – 145 கி.மீ. மணி வேகத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மர் இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையர் அவர்களுக்கும், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை பெருநகர ஆணையர் அவர்களுக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14.05.2023 வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Mocha Cyclone: வலுப்பெற்றது 'மோக்கா' புயல்; 9 மாவட்டங்களில் கனமழை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.