ETV Bharat / state

பேரிடர் கால ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க ‘வாட்ஸ்-அப் எண்’ அறிமுகம்

சென்னை: பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிகழும் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண், இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

disaster-management-introduced-new-whatsapp-number
பேரிடர் கால ஆபத்துகள்: தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்
author img

By

Published : Jun 8, 2021, 7:27 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரிடர் காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு பேரிடர் குறித்தான தகவல்களை குறித்த நேரத்தில் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கியமானதாகும். இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம், மத்திய நீர்வள ஆணையம் போன்ற அமைப்புகளில் இருந்து பெறப்படும் கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்தான எச்சரிக்கைத் தகவல்கள், TNSMART செயலி மூலமும், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், செய்தித்தாள், தொலைக்காட்சிகள் மூலமும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், பேரிடர்கள், விபத்துகளைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், படம் எடுத்து அனுப்பும் வகையிலும் 24 மணி நேரமும் இயங்கும் மாநில அவசரக் கட்டுப்பாடு மையத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனிப்பட்ட வாட்ஸ் அப் எண் 94458 69848 தொடங்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் வரப்பெறும் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைத் தகவல்கள், தொடர்புடைய அலுவலர்கள் துறைகளுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுமட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க ஏதுவாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் மக்கள் களம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை தகவல்களை மேற்படி வாட்ஸ் அப் எண் மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’விவசாயிகள், பொது மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும்’ - கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.