ETV Bharat / state

பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரம்... பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு! - latest news chennai

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 400 பேருக்கு போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான வழக்கில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 11:06 AM IST

சென்னை: தமிழகத்தில் 2 ஆயிரத்து 222 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான தேர்வு முறையில் இருந்து 400 பணியிடங்களை காலியாக வைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடியாக நியமனம் வழங்க வேண்டும் என்றும், போட்டி தேர்வுகள் நடத்த கூடாது என்றும், தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகியவை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கவிதா ரமேஸ்வர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டதையும், போட்டி தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கபடுவதையும் சுட்டிக் காட்டினார்.

அந்த அறிவிப்பனையை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 பேர் கடந்த 10 ஆண்டுகளாக பணிக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார். அவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தாமல் நேரடியாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர்களை தனி பிரிவாக கருத வேண்டும் என வாதிட்டார்.

பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் சிலம்பண்ணன், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது உயர்நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டதே என்றும், அனைவரையும் சமமாக தான் பாவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த 400 பேரையும் தனி பிரிவாக கருதி பணியிடங்களை காலியாக வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர், இது தொடர்பாக அரசிடம் ஆலோசித்து மனுவாக தாக்கல் செய்ய உள்ளதாகவும், இல்லையென்றால் இந்த வழக்கில் வாதிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன், 2,222 பணியிடங்கள் என்பது உத்தேசமான எண்ணிக்கை தான் என்றும் தேவைப்படும் போது அது அரசு மாற்றியமைக்கும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், 400 பேரை மட்டும் போட்டி தேர்வு நடத்தாமல் தனி பிரிவாக கருதி காலியாக வைப்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் காந்திமதி ஆஜராகி போட்டி தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணை 149ஐ எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்கு வரும் திங்கட்கிழமை தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு வரவுள்ளது என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் அந்த வழக்கை தனி நீதிபதி முன்பே நடத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி காதல் திருமணம் தம்பதி படுகொலை வழக்கில் மேலும் 2 பேர் சரணடைந்தனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.