ETV Bharat / state

பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் நடவடிக்கை

டிசம்பர் 31ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளைத் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

private-schools
private-schools
author img

By

Published : Dec 27, 2021, 12:42 PM IST

சென்னை: அரையாண்டுத் தேர்வு நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பள்ளிக் கல்வித் துறை இன்றுமுதல் வரும் 31ஆம் தேதிவரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்திருக்கிறது. பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், சென்னை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல் இன்று வகுப்புகள் நடைபெறும் என்றும், திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் எனவும் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு உத்தரவை மதிக்காமல் தனியார் பள்ளிகள் ஒவ்வொரு முறையும் எப்படி விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடத்துவது வாடிக்கையாக இருந்துவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுவது குறித்தும், அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டிக்கு ஒரு மாணவர் நேற்று இரவு ட்வீட் செய்திருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

மேலும், திறக்கப்பட்டுள்ள தனியார் பள்ளியை உடனடியாக மூடவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 4 பெரிய திட்டங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட முடிவு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.