ETV Bharat / state

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு! - tamilnadu school plus 2 exam hall ticket download

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை நாளை முதல் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

Etv Bharat
கோப்புப்படம்
author img

By

Published : Jan 3, 2023, 3:18 PM IST

Updated : Jan 3, 2023, 3:50 PM IST

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத்தேர்வினை எழுதுவதற்கு 7,600 பள்ளிகளில் இருந்து 8.80 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு 3169 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வினை எழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர், விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான ஹால்டிக்கெட் தயார் நிலையில் உள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்த பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிட உள்ளது.

அதனை சம்பந்தப்பட்ட பள்ளிகள் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. பள்ளிகள் பதிவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டுகள் தேர்வுக்கு முன்னர் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை - டெல்லி இடையே கூடுதல் விமான சேவை!

Last Updated : Jan 3, 2023, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.