சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியில் மனிதம் பழகு என்ற அமைப்பின் அலுவலகத்தை இயக்குநர் வெற்றிமாறன் திறந்துவைத்தார்.
ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், இளைஞர்களுக்கு உடற்பயிற்சிக் சாதனங்களும், கரோனா பேரிடரில் பணியாற்றிய மனிதம் பழகு அமைப்பினருக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வடசென்னையில் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பு தலைமையில் மனிதம் பழகு என்ற அமைப்பு கரோனா நோய் தொற்று காலங்களில் பல்வேறு தரப்பினருக்கும் நிறைய உதவிகளை செய்துவருவதை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதற்காகவே நேரில் வந்தேன்.
ஒவ்வொருவரும் அருகில் இருப்பவர்களுக்கு உதவுவதுதான் சமூகத்தில் மேலே வருவதற்கான முதல் படி. மனிதம் பழகு மூலமாக சேவைகள் செய்துவருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
'வடசென்னை- 2' திரைப்படத்தின் வருகைக்காக வடசென்னை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், 'வடசென்னை- 2' படத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... #1yearofVadaChennai:'தவ்லூண்டு ஆன்கர்தான்டா அவ்வளவு பெரிய கப்பல நிறுத்துது'