ETV Bharat / state

போலி டாக்டர் பட்டம் அளிக்கத் தூண்டியது எது? - ஹரீஷ் கொடுத்த பகீர் வாக்குமூலம்! - Fake Doctorate Issue

பொறியியல் படிப்பை முடித்துவிட்டு போலி 'கவுரவ டாக்டர் பட்டம்' வழங்கிய இளைஞர், தான் பேச்சுப் போட்டியில் தனக்கு பரிசு வழங்கப்பட்டதை வைத்தே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் முடிவுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஹரீஷ்
ஹரீஷ்
author img

By

Published : Mar 6, 2023, 7:56 AM IST

Updated : Mar 6, 2023, 8:29 AM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் சினிமா பிரபலங்களுக்கு 'கவுரவ டாக்டர் பட்டம்' மற்றும் விருது வழங்கப்பட்டது. இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானவை என தெரிய வந்ததைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டங்களை வழங்கிய ஹரிஷ் மற்றும் அவருடைய கூட்டாளி மகராஜன் (எ) குட்டி ராஜா என்பவரை கோட்டூர்புரம் போலீசார் ஆம்பூர் அருகே வைத்து கைது செய்தனர்.

ஹரீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் பி.டெக் பொறியியல் படிப்பை படித்து முடித்து இருக்கிறார். கல்லூரி காலங்களில், திறமையான பேச்சாளராக இருந்து வந்திருக்கிறார். ஒரே நேரத்தில் 108 தலைப்புகளில் மாற்றி மாற்றி வேகமாக பேசக்கூடிய பேச்சாற்றலும் பெற்றிருக்கிறார். இதற்காக இவருக்கு தனியார் நிறுவனம் ஒன்று சிறந்த பேச்சாளருக்கான பட்டத்தை வழங்கி இருக்கிறது.

இந்த நிகழ்வு தான், இவருக்கு நாமும் ஏன் பட்டங்களை வழங்கக்கூடாது? என்ற ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பை முறைப்படி பதிவு செய்து அனுமதி பெற்று இருக்கிறார். சென்னை எம்ஜிஆர் நகரில் சிறிய அறையில் அலுவலகத்தையும் ஆரம்பித்து செயல்பட்டு இருக்கிறார்.

இதன் பின்னர் சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிஆர்ஒ-ஆக வேலைப் பார்த்து வருதாகக் கூறிய குட்டி ராஜா என்ற மகாராஜனுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அவர் மூலமாக, சினிமா பிரபலங்களை ஹரிஷ் தொடர்பு கொள்ள தொடங்கி இருக்கிறார்.

இப்படியாக ஆரம்பத்தில் சினிமாவில் சிறிய ரோல்களில் நடிக்கக் கூடிய நடிகர்களை அழைத்து வந்து பட்டங்களை வழங்கி இருக்கிறார். அவர்களோடு சேர்த்து பலருக்கும் இந்த பட்டங்களை வழங்கி வந்திருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு கோயம்பேடு வளசரவாக்கம் என இரண்டு இடங்களில் இதே போன்று, இரண்டு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். அதேபோன்று கடந்த 2022ஆம் ஆண்டும் இதே போன்று இரண்டு டாக்டர் பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி முடித்து இருக்கிறார்.

சினிமா பிரபலங்களுக்கு பட்டங்களை இலவசமாகவே வழங்கி வந்திருக்கிறார். அதே நேரத்தில், பிற நபர்களுக்கு டாக்டர் பட்டங்கள் ஆசையைக் காட்டி, ஒரு பட்டத்திற்கு 15 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார். பின்னர் பணம் வழங்கியவர்களுக்கு இந்த பட்டத்தையும் தயார் செய்து கொடுத்திருக்கிறார்.

அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஏராளமான கவுரவ டாக்டர் பட்டங்கள், பரிசு கேடயங்கள், 96 பதக்கங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இன்டர்நெட் உதவியுடன் அதில் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய மாதிரி பட்டங்களை பார்த்து, இவர் இந்த பட்டங்களை தயார் செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் தான், முறைப்படி பதிவு செய்த சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பில் தன்னுடைய அமைப்பிற்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதி இருப்பதாகக் கூறி, அவரே அந்த ஆவணங்களில் திருத்தி எழுதியதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் எப்போதோ வழங்கிய வாழ்த்து மடல் ஒன்று இவரது கைக்கு கிடைத்திருக்கிறது. அதில் அவருடைய கையெழுத்து இருப்பதை பார்த்த ஹரிஷ் உடனடியாக இதற்கென உள்ள பிரத்தியோக செல்போன் செயலி மூலம் அவருடைய கையெழுத்தை அப்படியே வேறொரு காகிதத்தில் பதிவிட்டு நீதிபதியே அனுமதி வழங்கக் கோரி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வேண்டுகோள் வைப்பது போல தயார் செய்து கொடுத்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்படுகிறது என்பதால் பலரும் இதனை உண்மை என நம்பி அதற்கு ஒப்புதல் அளித்ததாக கூறியிருக்கிறார். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அவர்களை வெறும் பட்டம் வழங்கும் விழா எனக்கூறி அழைத்ததாக தெரிவித்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து வழங்கப்பட்ட போலி கவுரவ டாக்டர் பட்டத்திற்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததாகவும், அதில் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். தான் மட்டுமல்ல பல அமைப்புகள் இதே போன்று, பல போலியான பட்டங்களை வழங்கி வருவதாக அவர் கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலி டாக்டர் பட்டம் விவகாரம்: தலைமறைவாக இருந்த ஹரிஷ் கைது!

Last Updated : Mar 6, 2023, 8:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.