சென்னை: தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கரோனா வார்டுகளை மறுக்கட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதி, மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கரோனா பரிசோதனை செய்தல், கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கரோனா - சுகாதாரத்துறை செயலாளர் மீண்டும் ஆய்வு!