ETV Bharat / state

Manobala Funeral: நடிகர் மனோபாலா இறுதி ஊர்வலம்!

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலாவின் இறுதி ஊர்வலத்தில் திரைத்துறையினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

RIP Manobala: மனோபாலாவின் இறுதிச் சடங்கில் மவுனமாகும் தமிழ் சினிமா

author img

By

Published : May 4, 2023, 10:08 AM IST

Updated : May 4, 2023, 1:05 PM IST

மனோபாலாவின் இறுதி நிமிடங்கள்

சென்னை: கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான 'ஆகாய கங்கை' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மனோபாலா, இது வரையில் 40 திரைப்படங்கள் மற்றும் 16 தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி உள்ளார். மேலும், 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த மனோபாலா, தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாரதிராஜாவின் மாணவர் ஆவார்.

'நட்புக்காக' என்ற படத்தில் 'சிறுசு.. பெருசு..' என இவர் பேசும் வசனங்கள், அவரது கதாபாத்திரத்தை இன்றளவும் நம்முள் நிலைத்து வைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலமே நடிகராக அறிமுகம் ஆன மனோபாலா, ரஜினி, கமல், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் உடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், 69 வயதான மனோபாலா, நேற்று (மே 3) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். இதனையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மனோபாலாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முதல் திரை நடிகர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முக்கியமாக, நேற்று மணிரத்னம், ஹெச்.வினோத், தாமு, மோகன், கவுண்டமணி, தாமு, பி.வாசு, எல்.விஜய், சேரன், போண்டா மணி, பேரரசு ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேநேரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பாரதிராஜா, இளையராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சீமான், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று(வியாழக்கிழமை) காலை 2வது நாளாக மனோபாலாவின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். முக்கியமாக, சூரி, பாக்ய்ராஜ், சாந்தனு பாக்யராஜ், கோவை சரளா, பசுபதி, தாடி பாலாஜி, கனல் கண்ணன், லோகேஷ் கனகராஜ், ஷங்கர், யோகிபாபு ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரில் வந்து மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், மனோபாலாவின் இறுதிச் சடங்கு தற்போது தொடங்கி உள்ளது. இதனையடுத்து மனோபாலாவின் உடல் கலைஞர் தெரு, அபுசாலி தெரு, 80 அடி சாலை, ராஜமன்னார் சாலை, வன்னியர் தெரு மற்றும் ஆர்காட் சாலை வழியாக வளசரவாக்கம் மின் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் கோவை சரளா, சுரேஷ் சக்கரவர்த்தி, பசுபதி, ரவி மரியா, உதயா, ஆர்.கே.செல்வமணி, பேரரசு, தேனப்பன் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மனோபாலாவின் உடலுக்கு மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Actor manobala: மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய், கவுண்டமணி

Last Updated : May 4, 2023, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.