ETV Bharat / state

படப்பிடிப்புக்கு அனுமதி: தமிழ்நாடு அரசுக்கு பாரதிராஜா நன்றி...!

சென்னை: திரைப்பட படப்பிடிப்பிற்கு அனுமதியளித்த தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

Director bharathiraja Thanks to TN Chief Minister ofand Minister Kadampur Raju

author img

By

Published : Aug 31, 2020, 1:27 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா காலக்கட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான முடிவுகள் எடுக்க முடியாத நிலை இருப்பினும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உதவியாக இருந்தீர்கள்.

திரையுலகிற்காக உங்களது அனுமதி கதவுகளும், பிரச்னைகளை புரிந்துகொள்ள செவிகளும் காலம் தாழ்த்தியதே இல்லை. திரையுலகம் இருண்டுவிட்டதோ, திரும்பத் தழைக்க அடுத்த ஆண்டு ஆகிவிடுமோ? பட்டினியால் பல குடும்பங்கள் வதங்கிவிடுமோ என்ற பதற்றமும், முடிவு தெரியா குழப்பமும் மேலிட்டது.

அப்போது தான் கடந்த 14ஆம் தேதி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சின்னத் திரை படப்பிடிப்பு போலவாவது நடத்த அனுமதியுங்கள் என அரசிடம் கோரிக்கை வைத்தோம்.

கரோனா பரவல் சூழலில் அரசு நினைத்திருந்தால் நாங்கள் படப்பிடிப்பிற்குச் செல்வதை முடக்கி வைத்திருந்திருக்கலாம். ஆனால், அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி முழுமையாக செயல்படுவோம் என்ற உறுதிமொழியைக் கருத்தில் கொண்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததை நன்றியோடு பார்க்கிறோம்.

பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் இதனால் இழப்பிலிருந்து மீள முடியும். தற்போது படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்ல அனுமதி தந்துள்ளீர்கள். இன்னும் சில வரைமுறைகளோடு திரையரங்குகள் இயங்கவும் ஆவண செய்வீர்கள் எனக் காத்திருக்கிறோம்.

சினிமா வாழ வழிவகை செய்தால் அத்தனை ஆயிரம் கலைக் குடும்பங்களும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாவோம். அந்த கனிவைக் காட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், எங்கள் பிரச்னைகளைக் கூர்ந்து கேட்டுக்கொள்ளும் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் நன்றிகள் பல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.