ETV Bharat / state

பகலில் 40, இரவில் 50.. சென்னையில் புதிய ஸ்பீடு விதிகள் அமல்.. மீறினால் ஃபைன் எவ்வளவு தெரியுமா? - fine has been announced to bikers in chennai

சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கும், அதி வேகமாக சாலையில் பயணம் செய்வோருக்கும் புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் அபராதத்தை சென்னை மாநகர் காவல் ஆனையர் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறலை தடுக்க, சென்னை போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு புதிய தொழிற் நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

author img

By

Published : Jun 19, 2023, 9:38 PM IST

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: போக்குவரத்து விதிமீறலைத் தடுக்க, சென்னை போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு புதிய தொழிற் நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதால் வாகன விபத்துகள் அதிகமாக நடைபெறுவதைத் தவிர்க்கும் விதமாக பல்வேறு முனைப்புகளுடன் இந்த திட்டத்தைச் செயல்படுத்தச் சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை திட்டமிட்டுள்ளது.

முதல்முறையாகச் சாலை விபத்துகளைத் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. முதற்கட்டமாகச் சென்னையில் 30 இடங்களில் அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்காணிக்க ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. பொருத்தப்பட்ட இந்த சிசிடிவி கேமரா சாலையில் அதிவேகமாகச் செல்லக் கூடிய வாகனங்களைப் புகைப்படம் எடுத்து வாகனங்களின் விவரங்களை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்திற்குச் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் வாகனம் செல்லுவதற்கான வேகக்கட்டுப்பாட்டையும் நிர்ணயித்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் வாகனங்களுக்குக் காலை 7மணி முதல் இரவு 10மணி வரை 40கிமீ வேகத்திலும், இரவு 10மணி முதல் காலை 7மணி வரை 50கிமீ வேகத்தில் மட்டுமே அனைத்து வாகன ஓட்டிகளும் செல்ல வேண்டும் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: Chennai Traffic Police: டிடி கேஸில் ரூ.15 கோடி அபராதம் வசூல்.. சென்னை டிராஃபிக் போலீஸ் அதிரடி!

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “இந்த பயன்பாடு சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் முனைப்புடன் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதனை மீறி அதிவேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, அபராதம் விதிக்கப்படும் வகையில் அவர்களின் செல்போன் எண்ணுக்கு உடனடியாக 1000 ரூபாய் பிடித்தம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த செயல்பாடு பிராதான சாலைகளான டாக்டர் குருசாமி பிரிட்ஜ், அமைந்தகரை புல்லா அவென்யூ, மதுரவாயல் ஜங்ஷன், ஈஞ்சம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட 10 இடங்களில் அதிவேகம் தடுக்கும் கருவி பொருத்தப்பட்டு உள்ளதாக” தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், சென்னை மாநகரில் எத்தனை வேகத்தில் வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதற்கான விதிமுறை முன்னதாகவே போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படியே போக்குவரத்து காவல்துறை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாகத் தொடர்ச்சியாக அபராதம் வந்தால், பின்னர் அரசுக்குக் கடிதம் எழுதி இதில் மாற்றம் செய்வதற்கான நடைமுறையில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார். வெறும் சாலையாக இருக்கும் பட்சத்திலும் 40கிமீ மேல் வேகத்தில் செல்லக்கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கல்யாணம் ஆன பெண்ணுடன் காதல்.. சொந்தக்கடையில் 1 கிலோ தங்கம் சுருட்டல்.. காதல் மன்னன் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.