ETV Bharat / state

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உண்மையை அம்பலப்படுத்த வலியுறுத்தல் - tamil nadu congress leader

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

அம்பலப்படுத்த வலியுறுத்தல்
அம்பலப்படுத்த வலியுறுத்தல்
author img

By

Published : Jul 31, 2021, 6:05 PM IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸின் எதிர்கால செயல் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.

இதில், உள்ளாட்சித் தேர்தல், தற்போதைய அரசியல் சூழ்நிலை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை என்.ராம், சசிகுமார் அணுகி உள்ளனர்.

நீதிமன்றத்தின் கடமை

இவ்விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும். வெளிநாடுகளில் கூட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை".

"தீவிரவாதிகளை ஒட்டுக் கேட்கும் கருவிகள் மூலம், சொந்த நாட்டில், சொந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் நேரடியாக மோடி, அமித்ஷா தலையீடு இருப்பது தெரியவந்துள்ளது. பாஜகவின் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் கூட எதிர்க்கட்சிகளின் குரலை கேட்டது. ஆனால், மோடி அரசு தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது".

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

"பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு ஏன் அழுத்தம் கொடுக்க மறுக்கிறார் என குண்டுராவ் கேள்வி எழுப்பினார். மேகதாது விவகாரத்தில் அந்தந்த மாநிலங்கள் அவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வருகின்றனர். இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்றார்.

அசாம் விவகாரம்

அசாம் முதல்வர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தலையிட்டு சுமூகமாக முடிக்க வேண்டும். ஆனால்அதனை செய்ய அவர் தவறிவிட்டதாகவும் குண்டு ராவ் கூறினார்.

இதையும் படிங்க :பாபுலால் சுப்ரியா அரசியலுக்கு முழுக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.