சென்னை: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பேசிய சில விஷயங்கள் அனைவரையும் சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தது.
பல வருடங்களுக்கு முன் தானும் உதயநிதியும் சினிமாவை பற்றி பேசிக் கொண்டு இருந்த போது , அவரிடம் சினிமாவை பற்றி இவ்வளவு அறிந்து வைத்துள்ள நீங்கள் எப்படி அந்த சுமாரான படத்தை தயாரித்து வெளியிட்டீர்கள் என கேட்டேன் , அதற்கு அவர் தனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. உங்களை போலவே நானும் இயக்குனரிடம் படம் சுமாராக இருக்கிறது என சொன்னேன்... சரி உதய் இன்னொரு முறை முழு சூட்டிங் எடுப்போம் என்று சொன்னதால் அமைதியானேன் என சொன்னதை நினைவு கூர்ந்தார்.
இதை கேட்டவுடன் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. அப்போது நடிகர் சிவகார்த்தியேன் உதயநிதியிடம் அது என்ன படம் என்று கேட்க , அவர் சைலண்டாக பதில் ஒன்றை கூறினார். சிவகார்த்திகேயன் அப்போது கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாக அஜித் ரசிகர்கள் நிச்சயம் அது விஜய் நடிப்பில் ஸ்பெஷல் லாங் ஜம்ப் காட்சிகள் இடம் பெற்றிருந்த குருவி படம் தான் என்று டிவிட்டரில் Quote மற்றும் retweet செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: புரட்சி செய்ய கிளம்புகிறாரா பருத்திவீரன்? - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு