கரூர்: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. பிரதானக் கட்சிகள் விறுவிறுப்பாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை துவங்கி உள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் கடந்த முறை கணிசமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் மேனகா நவநீதன் மீண்டும் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
மேலும் அத்தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக ஈரோட்டில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் பேசியிருந்தார். சீமானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து,சிறப்பாக மக்கள் பணியாற்றி,மக்களிடம்.பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி திரு.சீமான் இப்படி ப் பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது. pic.twitter.com/isxbnjWljr
— Jothimani (@jothims) January 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து,சிறப்பாக மக்கள் பணியாற்றி,மக்களிடம்.பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி திரு.சீமான் இப்படி ப் பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது. pic.twitter.com/isxbnjWljr
— Jothimani (@jothims) January 31, 2023காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து,சிறப்பாக மக்கள் பணியாற்றி,மக்களிடம்.பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி திரு.சீமான் இப்படி ப் பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது. pic.twitter.com/isxbnjWljr
— Jothimani (@jothims) January 31, 2023
இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, சிறப்பாக மக்கள் பணியாற்றி, மக்களிடம் பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி, திரு.சீமான் அவர் நாம் தமிழர் கட்சியில் இணைய விரும்பினார் என்று பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது.
சீமானின் மக்கள் விரோத அரசியல் மீது திருமகன் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியின் கண்டனப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புது ரூட்டில் பயணிக்கும் ஈபிஎஸ்.. ஈரோடு கிழக்கு வியூகம் என்ன?