சென்னை: இந்திய திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலரும், ஊடக ஆலோசகருமான டைமண்ட் பாபு, தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கின்றார். இவர் இந்திய திரைத்துறையில் மொத்தமாக 600க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
இவரது தந்தை ஆனந்த் தமிழ் திரைத்துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆவார். மேலும் இவர் தமிழ் திரைத்துறையின் முதல் மக்கள் தொடர்பு அலுவலர் என அழைக்கப்பட்டவர்.
35ஆவது ஆண்டு நிறைவு
இவரைத் தொடர்ந்து இவரது மகன் டைமண்ட் பாபு, கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் திரைப்படத்தின் மூலம் மக்கள் தொடர்பு அலுவலராக அறிமுகமானார்.
அதன்பிறகு பல வெற்றிப் படங்களுக்கும், முன்னணி நடிகர்களுக்கும், மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றுடன் தமிழ் திரைத்துறையில் தனது 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.