ETV Bharat / state

தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் '104' என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் '104' என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By

Published : Jan 22, 2022, 7:59 PM IST

சென்னை: ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

முன்னதாக கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை ஐ.ஐ.டி உருவாக்கிய நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோட்டி, சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மெகா தடுப்பூசி முகாம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.22) 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதன் மூலம் 3.32 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. 15 முதல் 18 வயதுடைய 25 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 1.84 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி முதலிடம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் வியாழக்கிழமை 600 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 9.17 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பெருநகர மாநகராட்சிகளில் அதிக தடுப்பூசிகள் செலுத்தியதில் சென்னை மாநகராட்சி (94.9 விழுக்காடு) முன்னிலை வகிக்கிறது.

74.11 விழுக்காடு பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே தொற்றிலிருந்து மீள்வதற்கான வழிமுறை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தியுள்ளதால் இறப்பு விழுக்காடு குறைவாக உள்ளது. மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரசாங்கம் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.

சென்னையில் தொற்று குறைவு

எனவே தடுப்பூசிக்கு போலி சான்றிதழ் வாங்க வேண்டாம் என்பதை சிந்தித்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். உள் மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாள்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்தது. நேற்று (ஜன.21) 7 ஆயிரமாக குறைந்துள்ளது.

15 முதல் 18 வயதுக்குள்பட்டோர் வயது சான்றிதழை காண்பித்து அனைத்து தடுப்பூசி முகாம்களிலும் கோவாக்‌சின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

உருமாற்றம் அடைந்த கரோனா உள்பட அனைத்து வகை கரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் '104' என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: UP Assembly Election: புதுக் கூட்டணி அமைத்த அசாதுதீன் ஓவைசி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.