ETV Bharat / state

மடியில் கனம் இல்லையென்றால் ஏன் அச்சப்பட வேண்டும் - தயாநிதி மாறன்

சென்னை: மடியில் கனம் இல்லையென்றால் ஆட்சியாளர்கள் ஏன் அச்சப்பட வேண்டும் என மத்திய சென்னை திமுக நாடாளுமன்றத் வேட்பாளர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தயாநீதி மாறன்
author img

By

Published : Mar 30, 2019, 7:28 PM IST

மத்திய சென்னை தொகுதியில் திமுக மகளிர் அணி சார்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை தயாநிதி மாறன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மகளிர் அணி சார்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி மனையை திறந்து வைத்தது மகிழ்ச்சியளிகிறது. பொள்ளாச்சியில் மகளிருக்கு எதிராக நடந்த அநீதியையும், உண்மைகளையும் எடுத்துரைத்து, அந்த சம்பவத்திற்கு துணை நிற்கும் துணை சபாநாயகர் ஜெயராமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எங்கள் மகளிர் அணியினர் பரப்புரை மேற்கொள்வார்கள்.

மடியில் கனம் இல்லையென்றால் ஏன் அச்சப்பட வேண்டும்- தயாநீதி மாறன்

மேலும் வருமானவரி துறையை மோடி அரசு தவறுதலாக பயன்படுத்தி வருகிறது. ஆட்சியாளர்கள் பேச்சை கேட்டு தவறு செய்யும் அதிகாரிகள் மீது எங்கள் ஆட்சியில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கொடநாடு விவகாரம் பற்றி பேச கூடாது என்று அதிமுகவினர் சொல்கிறார்கள். மடியில் கனம் இல்லை என்றால் ஏன் பயம் கொள்கிறீர்கள். தப்பு செய்ததை மறைக்கவே ஆட்சியாளர்கள் முயலுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மடியில் கனம் இல்லையென்றால் ஏன் அச்சம் என தயாநிதி மாறன் கேள்வி. 

மத்திய சென்னை திமுக தேர்தல் பணி மனையை மகளிர் அணி சார்பாக சென்னை அண்ணா நகரில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகளிர் அணி சார்பாக வைக்கப்பட்ட தேர்தல் பணி மனையை திறந்து வைத்தேன். திமுக மகளிர் அணி ராணி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
 குறிப்பாக பிரச்சாரத்தில் பொள்ளாச்சியில் மகளிருக்கு எதிராக நடந்த அநீதியையும், உண்மைகளை எடுத்துரைத்து, ஆளும் கட்சி துணை சபாநாயகர் ஜெயராமன் காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்பதை கூறி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எங்கள் மகளிர் அணி பிரச்சாரம் செய்யும்.

வருமான வரி துறை தனித்துவமாக செயல்பட வேண்டும். இது அனைத்தும் பிரச்சாரத்திற்காக செய்கின்றனர். மோடி அரசில் சிபிஐ, போலிஸ், வருமான வரி துறை போன்றவை வேண்டுமென்ற திமுக அரசு 40/40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடும் என்று செய்து வருகின்றனர். இது கர்நாடக மாநிலத்திலும் இவர்கள் செய்துள்ளனர். காரணம் என்னவென்றால் சோதனையில் என்ன கிடைத்தது என்று சொல்லாமல் வெறும் நாங்கள் தவறு செய்துள்ளோம் என்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். சேகர் ரெட்டி வீட்டில் 130கோடி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த வழக்கு என்ன ஆகியது என்று தெரியவில்லை. வருமானம் வரி துறையை மோடி அரசு தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பேச்சை கேட்டு தவறு செய்யும் அதிகாரிகள் மீது அடுத்து மாறி வரும் ஆட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்..

கொடனாடு விவகாரம் பற்றி பேச கூடாது என்று சொல்கிறார்கள். மடியில் கனம் இல்லை என்றால் ஏன் அஞ்சுகீரீர்கள். தப்பு செய்வதை மறைக்க அனைத்து நடவடிக்கை எடுகின்றனர்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.