சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியில் ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கோழிகளை ஏற்றி வந்த லாரியை அலுவலர்கள் தடுத்தி நிறுத்தினர். அந்த வாகனத்தில் நான்கு ஊழியர்கள் இருப்பதைக் கண்ட அலுவலர்கள், வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கி மற்றவர்களை இறங்க கூறினர்.
பின்னர், இறக்கிவிட்ட ஊழியர்களை சிறிது தூரம் தாண்டி மீண்டும் லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். இதைக் கண்ட வட்டாட்சியர், லாரியை மீண்டும் துரத்திப் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார்.
மேலும், 144 தடை காரணமாக அடிப்படைத் தேவைகள் கொண்டுச் செல்லும் வாகனங்கள் அரசிடம் உரிய அனுமதி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: 144 தடை உத்தரவு மீறல்: 54 பேரை திருப்பி அனுப்பிய காவல் துறை