ETV Bharat / state

பண்பாடு மிக்க பாரத பிரதமரை நாம் பெற்று உள்ளோம்: தருமபுர ஆதீனம் புகழாரம் - new Parliament

பண்பாடு மிக்க பாரத பிரதமரை நாம் பெற்றுள்ளோம் என புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பண்பாடு மிக்க பாரத பிரதமரை நாம் பெற்று உள்ளோம்” என தருமபுரம் ஆதினம் பேட்டி

author img

By

Published : May 29, 2023, 8:04 AM IST

Updated : May 29, 2023, 8:16 AM IST

தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கோலாகலமாக டெல்லியில் நேற்று (மே 28) நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், நீதிபதிகள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், கலந்து கொண்டனர். முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருப்பிடம் அருகே பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் பாஜக ஆன்மீக பிரிவு சார்பில் ஆதீனங்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு நாகராஜன், சுமதி வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த நிகழ்வுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதீனங்களையும் அழைத்தார்கள்.

ஏற்கனவே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செங்கோலை மீண்டும் பிரதமர் மோடியின் கையில் கொடுத்து ஆசீர்வதித்தோம். அதற்கு புனித கங்கை நீர் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு 'கையலாய பரம்பரை ஆதீனங்கள் வந்தது. நாங்கள் செய்த பாக்கியம்' என்று பிரதமர் மோடி அவர்கள் கூறினார். இது தேசிய ஒற்றுமைக்கும் ஒரு வழிகோலாக அமைகிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆதீனங்கள் வருகையை அவர் (மோடி) புண்ணியமாக கருதி ஆதீனங்கள் அனைவரையும் தனித் தனியாக சந்தித்து மரியாதை செலுத்தி வணங்கிச் சென்றார். பண்பாடு மிக்க பாரத பிரதமரை நாம் பெற்று உள்ளோம் என்று புகழாரம் சூட்டினார்.

வைணவ சமயத்தை சேர்ந்தவர்கள் அழைக்கப்படவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ”இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது சைவ மடத்திலிருந்து தான் செங்கோல் கொடுத்தோம். அதன் அடிப்படையிலேயே தற்போது நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சைவ ஆதீனங்கள் வரவழைக்கப்பட்டனர் என்று தருமபுரம் ஆதினம் பதில் அளித்தார்.

இதையும் படிங்க: 'நாடாளுமன்றத்தை செங்கோல் அலங்கரித்த நாள்; ஆளுநர் மாளிகையில் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடப்படும்' - ஆளுநர் ரவி

Last Updated : May 29, 2023, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.