ETV Bharat / state

500, 1000 ரூபாய்களை வைத்து கடனை அடைத்த வங்கி மேலாளர் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு! - போலி ஆவணங்கள்

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வங்கிக் கடனை அடைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ரெப்கோ வங்கி தலைமை மேலாளர் மீதான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

dharmapuri repco bank scam highcourt
500, 1000 ரூபாய்களை வைத்து கடனை அடைத்த வங்கி மேலாளர் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!
author img

By

Published : Feb 22, 2020, 4:48 PM IST

ரெப்கோ வங்கியின் தருமபுரி கிளை தலைமை மேலாளராக 2014ஆம் ஆண்டுமுதல் 2017ஆம் ஆண்டுவரை பதவி வகித்த கமலக்கண்ணன் என்பவர் ஆறு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா சிபிஐயில் புகார் அளித்தார். இந்தப் புகாரில் குற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என சிபிஐ விசாரணைக்கு எடுக்க மறுத்துவிட்டது.

dharmapuri repco bank scam highcourt
500, 1000 ரூபாய்களை வைத்து கடனை அடைத்த வங்கி மேலாளர் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்

இதனையடுத்து, ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா தமிழ்நாடு காவல் துறைக்கு இது தொடர்பில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தருமபுரி மாவட்ட காவல் நிலையத்தில் கமலக்கண்ணனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்று கடன்களை முடித்துவைத்ததாகக் கூறி, தனக்கு எதிராக வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா, போலி ஆவணங்களைத் தயாரித்து பொய் புகார் அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி காவல் நிலையத்தில் அளித்த புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கமலக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டதாகத் தனக்கெதிராகக் கூறப்பட்ட புகாரில் முகாந்திரம் இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில், தருமபுரி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடையாமல் நீண்ட நாள்களாக நிலுவையில் இருக்கிறது.

வங்கி நிர்வாக இயக்குநருக்கு எதிராக நான் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : பாஜகவின் பாவச்செயல்களுக்கு அதிமுக பலியாக நேரிடும் - திருமா எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.