ETV Bharat / state

திரையரங்குகளில் தெறிப்புத் தருணங்கள் இருக்கும் - மாமன்னன் பார்த்து பாராட்டிய நடிகர் தனுஷ்! - red giant movies

மாமன்னன் திரைப்படம் நாளை (29.06.2023) வெளியாகிறது. இந்நிலையில் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் படம் குறித்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

dhanush maamannan
dhanush maamannan
author img

By

Published : Jun 28, 2023, 4:17 PM IST

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ள படம், மாமன்னன். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இப்படமானது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசிப் படம் என கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் தனது முந்தைய படங்களை போன்றே இப்படத்தையும் மிகுந்த கவனத்துடனும் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை எடுத்துச் சொல்லும் படமாக உருவாக்கி உள்ளார் . இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. தற்போது வரையிலும் சமூக வலைத்தளங்களில் மாரி செல்வராஜுக்கு எதிராக கருத்துகள் பரவி வருகின்றன.

இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது இது வழக்கமான மாரி செல்வராஜ் படமாகத்தான் இருக்கும் என்ற நிலையில் இப்படத்திற்குத் தடை கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து படம் வெளியானால் தென் மாவட்டங்களில் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்பது வழக்குத் தொடர்ந்தவர்களின் வாதமாக இருக்கின்றது.

தேவர்‌ மகன் படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் வடிவேலு கதாபாத்திரம். தேவர்‌ மகன் படத்தில் எனது அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பதே இப்படம் என்று மாரி செல்வராஜ் கூறியிருந்தார். ட்ரெய்லரும் அதைத்தான் உணர்த்தியுள்ளது.

இதுவரை யாரும் பார்க்காத வடிவேலுவை காட்டியுள்ளார். இதில் வடிவேலு அப்பாவாகவும் உதயநிதி ஸ்டாலின் மகனாகவும் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் கம்யூனிஸ்ட்டாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ''மாரி செல்வராஜின் மாமன்னன் ஒரு உணர்ச்சி. மாரி செல்வராஜுக்கு எனது மிகப் பெரிய அரவணைப்புகள். வடிவேலு மற்றும் உதயநிதி இருவரும் நம்பும்படியான நடிப்பை வழங்கியுள்ளனர். ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரது நடிப்பும் நன்றாகவுள்ளது. இப்படத்தின் இடைவேளை காட்சியில் திரையரங்குகளில் நிச்சயம் தெறிப்புத் தருணங்கள் இருக்கும். இறுதியாக ஏஆர் ரஹ்மான் அழகு'' என்று பதிவிட்டுள்ளார். மாமன்னன் திரைப்படம் யு/ஏ சான்றிதழுடன் நாளை (29.06.2023) வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷின் டிவிட்டர் பதிவு மாமன்னன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :அமேசான் பிரைமில் வெளியாகிறது 'ஸ்வீட் காரம் காபி' வெப் சீரிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.