சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ பதிவு ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்றைய காலகட்டத்தில் 15 வயது முதல் 25 வரை உள்ள இளைஞர்கள் அதிக அளவில் இணையதள விளையாட்டுகளில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனால், பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது.
படிப்பில் கவனம் தேவை:
அதேபோல் இணையதள விளையாட்டுகளில் அதிக அளவு கவனம் செலுத்துவதன் காரணத்தால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகிறது.
அதுமட்டுமின்றி பப்ஜி, ஃப்ரீ பையர் உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளில் இளைஞர்கள் தங்களது முழு கவனத்தை செலுத்தினால் அதன் விளைவாக தங்களது வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடைய முடியாது.
இந்த இணையதள விளையாட்டுகளை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேறும் வழிகளில் ஈடுபடவேண்டும்” என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 'எனது நடவடிக்கைகள் மட்டுமே பேசும்' - புதிய டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை