ETV Bharat / state

'சிறப்பாக பண்ணியிருக்கீங்க...' - தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி பாராட்டு - பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேவர் ஜெயந்தி விழாவில் சிறு அசம்பாவிதம்கூட நடைபெறாத வண்ணம் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த அலுவலர்களை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 2, 2022, 3:56 PM IST

சென்னை: தேவர் ஜெயந்தி விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ள அலுவலர்களுக்கும் காவலர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டின் பாதுகாப்பில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தேவர் ஜெயந்தி விழா கடந்த அக்.30ஆம் தேதியன்று நடைபெற்றது.

சட்டம் - ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநர் தாமரைக் கண்ணன், மேற்பார்வையில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க், மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் மயில்வாகனன், 24 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 10ஆயிரம் காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள், ஒரு சிறு மோதல் சம்பவம் கூட ஏற்படாதவண்ணம் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்.

உங்களது இந்தச்சாதனையின் மூலம் நமது தமிழ்நாடு காவல்துறைக்குப்பெருமை சேர்த்துள்ளீர்கள். பாதுகாப்புப் பணியில் நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக இருந்துள்ளீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இப்பணியில் கடமையாற்றிய அனைத்து அலுவலர்களுக்கும், காவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கடமையாற்ற வாழ்த்துகிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’ஒரு நிமிடம் வந்துட்டு போ..’ கோவை கார் வெடிப்பு தொடர்பான ஆடியோ வெளியானது..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.