ETV Bharat / state

மகளிர் தின சிறப்பு பேட்டி-தீயணைப்பு துறையில் சாதிக்கும் கக்கனின் பேத்தி

author img

By

Published : Mar 8, 2022, 11:52 AM IST

பெண்கள் எதிலும் குறைந்தவர்கள் இல்லை என நிரூபிக்க கடுமையாக பணியாற்றிட வேண்டும் என தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண்கள் தின வாழ்த்து தெரிவித்த அப்துல் கலாமிட இருந்து விருதுபெற்ற மீனாட்சி விஜயகுமார்

சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் இணை இயக்குநராக பணிபுரிந்து வருபவர் மீனாட்சி விஜயகுமார் (58). இவர், நேர்மையின் சிகரம் முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் கக்கனின் பேத்தி . இவர் 2003ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக தீயணைப்புத் துறையில் தேர்வான பெண் ஆவார்.

இவர் 2013ஆம் ஆண்டு தீ விபத்திலிருந்து இரண்டு உயிர்களை காப்பாற்றியதற்காக குடியரசுத் தலைவரிடம் பதக்கம் பெற்றார். 2019ஆம் ஆண்டு மெரிட்டோரியஸ் சர்வீஸிற்கான (Meritorious service) குடியரசுத் தலைவரின் பதக்கத்தையும் அவர் பெற்றவர்.

அப்துல் கலாமிட இருந்து விருதுபெற்ற மீனாட்சி விஜயகுமார்

தென் கொரியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலக தீயணைப்பு வீரர்கள் விளையாட்டுகள், உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டுகள், இந்திய தீயணைப்பு சேவை விளையாட்டுகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய தீயணைப்பு அதிகாரி.

இவர் இந்தியா முழுவதும் பல தீயணைப்பு துறை சார்ந்த பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார். இத்தகைய வீரப் பெண்மணி மீனாட்சி விஜயகுமார் மகளிர் தினத்தையொட்டி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டிளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “இந்தியாவில் தீயணைப்புத் துறையில் முதல் பெண்ணாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமைக்குரிய ஒன்று. ஒரு பெண் என்பவள் முழுமையாக சக்தி கொண்டவள் அதைப் புரிந்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

நான் முதன் முதலில் பணியில் சேரும்போது சென்னை மாநகரில் 600 பேருக்கு தலைமை வகித்தேன். அப்போது பல பேர் என் மீது விமர்சனங்களை வைத்தனர். இவர் ஒரு பெண்தானே, இவரால் எப்படி தீயணைப்பு துறையில் சிறந்தவராக பணியாற்ற முடியும் என விமர்சனங்களை வைத்தனர்.

இவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் நான் ஆணுக்கு இணையானவள் என நினைத்து தீயணைப்புத் துறையில் அனைத்து பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். கிட்டதட்ட 300 தீ விபத்துகளில் பணியாற்றியுள்ளேன். தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமி, 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனைத்திலும் கடுமையான பணி செய்தேன்.

2013ஆம் ஆண்டு தீ விபத்திலிருந்து இரண்டு உயிர்களை காப்பாற்றியபோது குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றேன். பெண்கள் எந்த வேலை செய்தாலும் அதில் தூய்மையாகவும், மனதிடம் மற்றும் எதையும் எதிர்பார்க்காமல் பணி செய்ய வேண்டும்.

இதனைக் கடைப்பிடித்து பணியாற்றியதால்தான், பல பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளேன். தமிழ்நாடு அரசு சார்பாக தரப்படும் அண்ணா விருதையும் நான் பெற்றுள்ளேன். எத்தனையோ தடைகள் வந்த போதிலும் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றினேன். இந்தியாவிற்காக பல விருதுகளை வாங்கியதில் பெருமை கொள்கிறேன்.

உலக மகளிர் தினமான இன்று (மார்ச் 08) பெண்களுக்கு நான் கூறுவது, பெண்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். படிப்பு தான் அவர்களுக்கு கடைசிவரை துணையாக வரும். இது என் வாழ்க்கையிலும் கற்றுக் கொண்டது. பெண்கள் குறைந்தவர்கள் இல்லை என நிரூபிக்க கடுமையாக பணியாற்றிட வேண்டும். பெண்களுக்கு வானமே எல்லை என்று கூறி பெண்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: உக்ரைன் ராணுவத்தில் கோவை இளைஞர்... உளவுத்துறை விசாரணை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.