தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உணவகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும். சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும். இதுபோன்ற நேரத்தில் சாலையோரங்களில் ஆதரவற்று இருக்கும் நபர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனைக் கண்ட வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, இதுபோல் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகிறார்.
வடசென்னை பகுதிகளான வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு, நேற்று (ஆக.16) சுப்புலட்சுமி உணவு பொட்டலங்களை வழங்கி அவர்களின் பசியைப் போக்கினார். காவல் துணை ஆணையரின் இந்த சேவை மனப்பான்மையை பலரும் பாராட்டி உள்ளனர்.
இதையும் படிங்க:100 குழந்தைகளுக்கு உணவளித்து வருகிறேன்: மாணவர்களின் பசியை போக்கும் பள்ளி ஆசிரியை!