ETV Bharat / state

’குட்கா விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்’ : அம்பத்தூர் காவல் துணை ஆணையர் உறுதி - கரோனா மருத்துவ முகாம்

சென்னை: குட்கா விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.

deputy-commissioner-of-police-deepa-sathyan
அம்பத்தூர் காவல் துணை ஆணையர் தீபா சத்யன்
author img

By

Published : Oct 18, 2020, 10:16 AM IST

அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட காவலர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்யன் பங்கேற்று காவலர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து, அவர் ஒவ்வொரு காவலர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து, முகக் கவசம், உடல் பரிசோதனை செய்யும் கருவி ஆகியவற்றை அந்தந்த காவல் ஆய்வாளர்களிடம் வழங்கினார்.

பின்னர் பேசிய தீபாசத்யன், ”சென்னை புறநகர் பகுதியில் குட்கா கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் சோதனைச் சாவடிகளில் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குட்கா கடத்தலில் ஈடுபடுவோர் முக்கிய சாலைகளை பயன்படுத்தாமல் வேறு வழிகளில் கடத்தல் செய்வதால் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்பத்தூர் காவல் துணை ஆணையர் தீபா சத்யன் பேசிய காணொலி

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அதன் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க:பெங்களூரு -சென்னைக்கு கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்: 5 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.