ETV Bharat / state

‘வெளிநாடு வாழ் தமிழர் குடியேற்றம் குறித்து கணக்கெடுப்பு’ - ஓ.பன்னீர்செல்வம் - தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர்

சென்னை: வெளிநாடு வாழ் தமிழர் குடியேற்றம் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஒ.பன்னீர்செல்வம்
ஒ.பன்னீர்செல்வம்
author img

By

Published : Mar 24, 2020, 7:02 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிய அறிவிப்புகள் குறித்து கூறியதாவது,

  • சிந்தாதிரிப்பேட்டை அரசு விருந்தினர் இல்லம் 15 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து கட்டப்படும், தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்தும் இடம், நுழைவு அனுமதி உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • உதகமண்டலம், தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். வெளிநாடு வாழ் தமிழர் குடியேற்றம் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
  • முகாம்வாழ் இலங்கைத் தமிழ் அகதிகள் அசாதாரண நிகழ்வுகளில் ஏற்படும் இறப்பில் வழங்கப்படும் நிவாரணத் தொகை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • முகாம் வாழ் இலங்கைத் தமிழ் அகதிகள் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்திற்கென சொந்த கட்டடம் 19 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  • முன்னாள் படை வீரர்கள், அவர்களைச் சார்ந்த 3,053 பேருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவிகள் இரண்டு கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினத்தில் உயர்த்தி வழங்கப்படும்.
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் படைவீரர் மாளிகை கட்டப்படும்.
  • முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்கள் வீடு கட்டுவதற்கு / வாங்குவதற்கு பெறும் கடன் தொகைக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 3 கோடி ரூபாய் செலவினத்தில் சுமார் 300 நபர்கள் பயன்பெறுவர்.
  • மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் நடத்தப்படும் பாதுகாப்புப் படைகளின் ஆட்சேர்ப்பு முகாமிற்காக மேற்கொள்ளப்படும் செலவினம் வழங்கப்படும்.
  • முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர்களுக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து போன்ற தொழில்நுட்பப் பயிற்சி பெறுவதற்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

இதையும் படிங்க: 6 புதிய தொழிற்பூங்காக்களில் 2,934 கோடி ரூபாய் செலவில் நவீன உள்கட்டமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.